இந்திய விசா விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்களில் IVS மையம் மூலம் ஏற்றுக்கொள்ளப்படும் – இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவிப்பு!

Saturday, July 2nd, 2022

இந்திய விசா விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்களில் IVS மையம் மூலம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இந்திய விசா விண்ணப்பங்கள் செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் அவுட்சோர்ஸ் விசா விண்ணப்ப மையத்தின் (outsourced visa application centre) மூலம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

புதிய விசா ஏற்பு அட்டவணை ஜூலை 4 ஆம் திகதி திங்கட்கிழமைமுதல் நடைமுறைப்படுத்தப்படும்.

இலங்கையின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இந்த அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: