இந்திய வர்த்தக அமைச்சர் இலங்கை வருகை!

Thursday, August 11th, 2016

இலங்கை இந்திய எட்கா உடன்படிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இலங்கை வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றி அவர் இதனை தெரிவித்துள்ளார். ஏற்கனவே அரசாங்கம் இந்தியாவுடன் இந்த உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாடுகிறது. அதேபோன்று சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தோனேசியாவுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: