இந்திய மீன்பிடிப் படகுகள் விடுவிக்கப்படவில்லை – மீன்பிடித்துறை அமைச்சர்!

Thursday, March 30th, 2017

இலங்கை கடற்படையினரால் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக கைப்பற்றப்பட்டுள்ள இந்திய மீன்பிடிப் படகுகள் எதுவும் விடுவிக்கப்படவில்லை என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டின் பின்னர் கைப்பற்றப்பட்ட எந்தவொரு இந்திய மீன்பிடிப் படகும் இதுவரையில் விடுவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள அவர் 2015ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு முன்னதாக கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளை அப்போதைய அரசாங்கம் விடுவித்திருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்திய மீனவர்களின் 130 படகுகள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


பசுபிக் கடலில் மூழ்கிய ஜப்பானிய கப்பல் அருகே இலங்கைக் கடற்படைக்க பயிற்சி!
மட்டக்களப்பில் கடும் காற்று : மீனவர்கள் பாதிப்பு!
அனுமதிப்பத்திரமின்றிப் பயணித்தால் ரூ.2 இலட்சம்அபராதம்!
100 நாடுகளில் மலேரியா : சமூக சுகாதார விசேட வைத்தியர் திருமதி தேவனீ ரணவீர!
இணுவில் விபத்து - சிறுவன் பலி : பொலிஸ் அதிகாரி கைது!