இந்திய மீனவர்கள் 99 பேர் விடுதலை

Friday, April 8th, 2016

இலங்கையி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 99 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று நாட்களில் நீதிமன்றங்களால் இந்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் லால் டி சில்வா தெரிவித்தார்.

இலங்கையின் கடற்பரப்புக்குள் எல்லைமீறி மீன்பிடித்தமையினால், யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் புத்தளம் கடற் பரப்புகளில் இந்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை, இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்யுமாறு இலங்கை சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் கூறினார். இலங்கை மீனவர்கள் சென்னை கடலோரப் பாதுகாப்புப் பிரிவினரின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அனுமதி இல்லாத சுற்றுலா விடுதிகள் கைப்பற்றப்படும் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானம்!
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரண்டு ந...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானம் - துறைமுகங்கள்,...