இந்திய மீனவர்கள் 15 பேரினதும் விளக்கமறியல் யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றத்தால் நீடிப்பு !

Saturday, December 10th, 2016

இலங்கையின் நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடித்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 15 பேரினதும் விளக்கமறியலை எதிர்வரும்-14 நாட்களுக்கு யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றத்தால்  நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இரு வேறு தினங்களில் யாழ்.நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச் சாட்டில் 15 மீனவர்களை கடற்படையினர் கைது செய்து யாழ். நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதனையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறான நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை(09) குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது 15 மீனவர்களையும் எதிர்வரும்-14 நாட்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை பதில் நீதவான் ஆர்.சபேசன் உத்தரவு பிறப்பித்தார்.

maxresdefault

Related posts:


மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை - சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவிப்பு!
நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்...
மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த பிராந்திய நாடுகள் ஒருங்கிணைய வேண்டும் – உலகத்...