இந்திய மீனவர்களின் 42 படகுகளை விடுவிப்பதற்கு கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை!

fbb4fe6b294074cd06198d1f913b8bb1_XL Friday, May 19th, 2017

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் 42 படகுகளை விடுவிப்பதற்கு கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

2015 ஆண்டு ஜனவரி மாதம் பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீனவ படகுகளை விடுப்பதற்கு வட மாகாண மீனவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்திய மீனவப் படகுகளை விடுவிப்பதற்கு முன்னர் இலங்கை கடற்பரப்பிற்குள் மீண்டும் பிரவேசிக்காமை உள்ளிட்ட நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிபந்தனைகளை இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக அந்த நாட்டு மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்திய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் வடபகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் கூறினார்.