இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க இயன்றவரை அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுப்படுகிறது – கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா தெரிவிப்பு!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைத் தடுப்பதற்காக, தங்களால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில், கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா கூறுகையில் –
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் பகுதிகள் தொடர்பான கண்காணிப்புகளின் அடிப்படையில், அந்தப் பகுதிகளில் கடற்படை படகுகள் கண்காணிப்பில் ஈடுபடுவதாகவும் எவ்வாறிருப்பினும், சில சில இடங்களில் அவர்கள் ஊடுருவ முடியும்.
இது கடற்படைக்கு அப்பால், இராஜதந்திர ரீதியிலான பிரச்சினையாகும் என்று கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழாவில், தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்பதை உறுதி செய்ய, இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய மத்திய அரசிடம் கோரியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்லர் நேற்று கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த ஆண்டு கச்சதீவு திருவிழாவில் தமிழக யாத்திரிகள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|