இந்திய மருத்துவர்களை அழைக்க அரசு!

Thursday, May 11th, 2017

அரச மருத்துவர்கள் அடிக்கடி மேற்கொண்டுவரும் வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு முகம் கொடுக்க இந்திய மருத்துவர்களை வரவழைப்பதற்கான தீர்மானத்தை அரசு எடுத்திருக்கின்றது என்று சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை அரச மருத்துவர்கள் முன்னெடுக்கும் அர்த்தமற்ற வேலை நிறுத்தங்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசளகரியங்களைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது எனவும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்தியாவிலிருந்து மருத்துவர்களை வரவழைக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது எனவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. இந்த ஏற்பாட்டைச் செயவதற்காகக் சுகாதார அமைச்சு அதிகாரிகளுக்கு ஏற்கனவே பணிப்புர விடுக்கப்பட்டிருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.

Related posts: