இந்திய பிரதமர் மோடியை சந்­திக்கும் ஜனா­தி­பதி!

Tuesday, May 10th, 2016

இந்­தி­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொள்­ள­வுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வரும் சனிக்­கி­ழமை இந்­தியப்பிர­தமர் நரேந்­திர மோடியை சந்­தித்து இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தை­களை நடத்­த­வுள்ளார்.

எதிர்­வரும் சனிக்­கி­ழமை புது­டில்­லியில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும், இந்தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டிக்­கு­மி­டை­யி­லான இரு தரப்பு சந்­திப்பு இடம்­பெ­ற­வுள்­ளது.

இந்­தி­யாவின் ஆளும் பார­திய ஜனதா கட்சி ஏற்­பாடு செய்­துள்ள மத விழா­வொன்றில் கலந்து கொள்­ளு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும், இந்­தியப் பிர­தமர் மோடி விடுத்­துள்ள அழைப்­பினை ஏற்று ஜனா­தி­பதி புது­டில்லி பய­ண­மா­கிறார்.

நாளை செவ்­வாய்க்­கி­ழமை பிரிட்டன் பய­ண­மா­க­வுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அங்­கி­ருந்­த­வாறு இந்­தி­யாவின் புது­டில்­லிக்கு பயணம் செய்­ய­வுள்ளார். லண்­டனில் நடைபெற­வுள்ள சர்­வ­தேச ஊழல் தடுப்பு மாநாட்டில் கலந்து கொள்­ளு­மாறு பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோன் ஜனா­தி­ப­திக்கு விடுத்த அழைப்­பினை ஏற்று ஜனா­தி­பதி பிரிட்டன் செல்­கிறார்.

அந்­த­வ­கையில் வௌ்ளிக்­கி­ழமை லண்­ட­னி­லி­ருந்து புது­டில்லி பய­ண­மா­க­வுள்ள ஜனா­தி­பதி அஙகு இந்­தியப் பிர­தமர் மோடி­யுடன் இரு தரப்பு பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­ப­ட­வுள்­ள­துடன் இதன்­போது இலங்கை மற்றும் இந்­தி­யா­வுக்­கி­டை­யி­லான உறவை வலுப்­ப­டுத்­து­வது தொடர்பில் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.

குறிப்­பாக இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­படும் புதிய அரசியலமைப்பு மற்றும் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின்போது பேச்சுவார்த்தை நடத்தப்படுமென தெரிவிக்கப்படுகிறது

Related posts: