இந்திய பிரதமர் நரேந்திர மோடி – ஜனாதிபதி கோட்டப ராஜபக்ச இடையே அபிவிருத்தி உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் தொலைபேசியில் கலந்துரையாடல்!

Saturday, March 13th, 2021

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம்  இடம்பெற்றுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் – இரு தலைவர்களுக்கும் இடையில் அபிவிருத்தி உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் குறித்த குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்திலும் இந்த தொலைபேசி உரையாடல் குறித்து பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: