இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையை வந்தடைந்தார்
Thursday, May 11th, 2017ஐக்கிய நாடுகள் விசாக பூரணை தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையை வந்தடைந்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக இலங்கை பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உட்பட பல அமைச்சர்கள் தற்போது விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தை முன்னிட்டு, கொழும்பு நகரில் இன்று மாலை 6 மணியில் இருந்து விசேட போக்குவரத்து ஒழுங்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.காவற்துறை தலைமையகத்தின் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, பேஸ்லைன் வீதி, தாமரைத் தடாகம், பித்தளை சந்தி, கொள்ளுபிட்டி, காலிமுகத்திடல், பௌத்தலோக்க மாவத்தை உள்ளிட்ட பல வீதிகளில், இன்று மாலை 6 மணிக்கு பின்னர் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுஅத்துடன் இந்திய பிரதமர் மோடி பயணிக்கின்ற சந்தர்ப்பங்களில் இந்த வீதிகளும், அதன் உள்வீதிகளும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் வீதியின் ஒருமருங்கிலேனும் வாகனங்களை செலுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் காவற்துறை தலைமையகம் அறிவித்துள்ளJ.
நாளை காலை 9 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச விசாகப் பண்டிகை நிகழ்வில் நாளையதினம் கலந்து கொள்ளவள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|