இந்திய பிரதமருடன் கும்பமேளா நிகழ்வில் கலந்து கொண்டார் ஜனாதிபதி!

Sunday, May 15th, 2016

இந்திய மத்திய பிரதேச மாநிலத்தின் உஜைன் பிரதேசத்தில் நேற்று காலை நடைபெற்ற இந்து மத நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக் கொண்டார்.

சிம்மாஷ கும்பமேளா என்ற இந்த இந்து சமய நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

இந்த புனித நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ள அனைத்து புனிதர்களையும் சிரம் தாழ்த்தி வரவேற்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய பிரதமரின் அழைப்பை ஏற்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

நான் இலங்கையின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்குதான் வந்தேன். அதன்பின்னர், சில கிழமைகளுக்கு பிறகு உங்கள் பிரதமர் எங்கள் நாட்டுக்கு வந்தார் என குறிப்பிட்டார்.

இதன்போது  உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி,

இதைப்போன்ற மிகப்பெரிய கும்பமேளா விழாக்களை நடத்துவதன் மூலம் பெரும்விழாக்களை ஏற்பாடு செய்யும் திட்டமிடல் மற்றும் செயல்பாடு தொடர்பான நமது ஆற்றலை நாம் உலகுக்கு வெளிப்படுத்துகிறோம் என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

நமது தேர்தல்களை பார்த்து இந்த உலகமே ஆச்சரியப்படுகிறது. இவ்வளவு பெரிய நாட்டில் இத்தனை கோடி வாக்காளர்கள் பங்கேற்கும் தேர்தல்களை நமது தேர்தல் ஆணைக்குழு மிக திறமையாக நடத்திவருவதை கண்டு உலகமே வியந்து, திரும்பிப் பார்க்கிறது என அவர் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் இதுபோன்ற கும்பமேளா விழாக்களை நடத்துவதன் மூலம் மரங்களை வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும், பெண் குழந்தைகளுக்கு கல்வியறிவை வழங்க வேண்டிய முக்கியத்துவத்தையும் மக்களுக்கு உணர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

13177433_10154051087206327_9131526513976317793_n

13177099_10154051084676327_7279145625892993498_n

Related posts: