இந்திய பிரதமரின் விஜயத்தில் உள்நோக்கம் இல்லை – இந்திய உயர்ஸ்தானிகரகம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் இலங்கை விஜயத்தில் எந்தவித அரசியல் மற்றும் பொருளாதார உள்நோக்கமும் கிடையாது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் நிகழ்வை ஆரம்பித்து வைக்கும் பிரதான நோக்கம் மாத்திரமே அவரது விஜயத்தின் முக்கிய குறிக்கோளாக இருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் தரின்ஜித் சிங் சந்து சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் 12 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதிவரை இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி நாளை மறுதினம் 11 ஆம் திகதி இங்கு வரவுள்ளார். அன்று மாலை கங்காராம விகாரையில் நடைபெறவுள்ள சமய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் இந்திய பிரதமர், அன்றைய தினமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளார்.
இதன்போது, ஜனாதிபதியினால் இரவு விருந்துபசாரமும் வழங்கப்படவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
Related posts:
|
|