இந்திய பிரஜைகள் 23 பேர் நாடு கடத்தல்!

கொழும்பில் கைது செய்யப்பட்ட 23 இந்திய பிரஜைகளும் நாடுகடத்தப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
விசாரணைகளின் பின்னர் அவர்கள் இன்று(15) நாடுகடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றிற்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது கொழும்பின் பல பகுதிகளிலிருந்து இந்திய பிரஜைகள் 23 பேரும் நேற்று(14) கைது செய்யப்பட்டுள்ளனர்
சுற்றுலா வீசாவில் நாட்டிற்கு வருகை தந்து சட்டவிரோதமாக தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு மாணவர்களுக்கான தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வுகள் கிளிநொச்சியில்!
சொந்த வீடு இல்லாத மக்களுக்கு வீடுகள்!
முரளிதரனுக்கு HALL OF FAME விருது!
|
|