இந்திய படகுகள் விடுவிக்கப்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Saturday, May 6th, 2017

எல்லைதாண்டி மீன்பிடியிலீடுபட்டிருந்த சமயங்களில் கைப்பற்றப்பட்ட  இந்திய  படகுகளில் பல சேதமடையும் நிலையில் உள்ளதால் அவற்றை விடுவிப்பதற்கு  தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கடற்தொழிற்றுறை மற்றும் நீரியியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர  தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற  உறுப்பினர் காஞ்சன விஜயரத்ன பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே  அமைச்சர்  இதனைக் குறிப்பிட்டார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்தடன் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டின் போது அவர்களுடைய படகுகளை கைப்பற்றும் செயற்பாடு வழமையான ஒன்றாகும். எனினும் இந்திய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த படகுகள் கடந்த அரசாங்க காலப்பகுதியிலும் விடுவிக்கப்பட்டன. இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரிப்பு காரணமாக இனி அவர்களுடைய படகுகளை விடுவிப்பதில்லை என்று அரசாங்கம் தீர்மானித்தது அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்

Related posts: