இந்திய நிதி அமைச்சர் – இலங்கை உயர்ஸ்தானிகர் இடையே சந்திப்பு – கடன் மறுசீரமைப்பிற்கான உத்தரவாதத்தை வழங்கியமைக்கும் நன்றி தெரிவிப்பு!
Thursday, March 23rd, 2023இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொட புதுடெல்லியில் நேற்று(21) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்காக, பொருளாதார ஒத்துழைப்புகள் மற்றும் உதவிகளை இந்தியாவிடமிருந்து பெறுவதற்காக 2021 நவம்பர்முதல் இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியைப் பெறுவதற்காக கடன் மறுசீரமைப்பிற்கான உத்தரவாதத்தை வழங்கியமைக்காக இந்தச் சந்திப்பின் போது மிலிந்த மொறகொட, இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஊடகங்களை மேற்பார்வையிட சுயாதீன ஆணைக்குழு - ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க!
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது - எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அறிவிப்பு!
தேர்தலுக்குச் செல்வது சாத்தியமற்றது - அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்திற்கு இணங்குங்கள் - மைத்தி...
|
|