இந்திய சாத்திரக்காரர்கள் யாழில் கைது!

இந்தியாவில் இருந்து வருகை தந்து யாழில் தங்கியிருந்த 5 சாத்திரக்காரர்களை குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் உள்ள குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் யாழ்.நகரில் உள்ள பிரபல விடுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஐந்து பேரும் கடவுச் சீட்டு காலம் நிறைவடைந்த பின்னரும் யாழில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை கட்டுநாயக்க விமான நிலைய அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதுடன், விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related posts:
எம்.ஜி.ஆரின் நினைவுதினம் திட்டமிட்டவகையில் இடைநிறுத்தம் – ஏற்பாட்டாளர்கள் வருத்தம்!
பாதகமான வர்த்தக ஒப்பந்தங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படும் - வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அறி...
கடும் அரசியல் தலையீடு : தகுதி அல்லாதோரின் உள்ளீர்ப்பே வடக்கு கிழக்கில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிறு...
|
|