இந்திய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு!

இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் இன்று உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ளார்.
இந்த பதவியேற்பு நிகழ்வு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று மதியம் 12.15 மணியளவில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த விழாவில் இந்திய பிரதமர் நரேந்திரசிங் மோடி, துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி உட்பட அனைத்து மாநில முதல்வர்களும், ஆளுநர்களும், மத்திய அமைச்சர்கள், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பிரதமர்கள், கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
Related posts:
நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்திற்கு தயார் : அரச மருந்தாக்கல் கூட்டுதாபனம்!
பொருளாதார அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு -அமைச்சர் ரவி கருணாநாயக்க!
யாழ்ப்பாணத்தில் குருநகர் பகுதி முடக்கம் : வெளியாட்கள் உள்நுளைய தடை - பொலிஸார், இராணுவம் குவிப்பு!
|
|