இந்திய கல்வித்துறை பட்டம் : வடக்கைச் சேர்ந்த 113 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

Friday, August 21st, 2020

அரசின் வேலைவாய்ப்பு திட்டத்தில் இந்தியாவிற்கு சென்று கல்விகற்று பட்டம்பெற்ற 113 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

இது குறித்து வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாவது –

அண்மையில் அரச வேலைவாய்ப்பிற்காக தெரிவுசெய்யப்பட்ட 50 ஆயிரம் பட்டதாரிகளிற்கான பெயர்பட்டியல் அரசினால் வெளியிடப்பட்டிருந்ததுடன், நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளின் விபரங்களும் அதற்கான காரணங்களும் வெளியிடப்பட்டிருந்தது.

அந்தவகையில் இலங்கை போரின் போது இடம்பெயர்ந்து இந்தியாவிற்கு சென்று அங்குள்ள பல்கலை கழகங்களில் படித்து பட்டம் பெற்று மீண்டும் நாடு திரும்பியவர்களின் விண்ணப்பங்களும் குறித்த பட்டியலில் நிராகரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் 27 பேரும் வவுனியா மாவட்டத்தில் 18 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 66 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேருமாக மொத்தம் 113 பேரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு பட்டம் என்ற காரணத்தை முன்வைத்தே அவர்களிற்கான தொழில் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது

.

Related posts: