இந்திய கடற்றொழிலாளர்களுடன் தொடர்பு – அனலைதீவிற்கான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம் – காரைநகர், அனலைதீவில் சில பதிகள் முடக்கம்!

Friday, October 9th, 2020

யாழ்ப்பாணம் அனலைதீவிற்கான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனலைதீவு பகுதியைச் சேர்ந்த கடற் தொழிலில் ஈடுபடும் இருவர் இந்தியாவிலிருந்து மஞ்சள் கடத்தலில் ஈடுபட்டமைக்காக ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட இருவரும் இன்றையதினம் கடற்படையினரின் உதவியுடன் விடத்தல் பளை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்கள்.

அத்தோடு மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட இருவரும் அனலைதீவு பகுதியில் நடமாடியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக முதல் கட்டமாக அனலைதீவிற்கான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அடுத்த கட்டம் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் ஆராய்ந்து வருகின்றார்கள்.

எனினும் தற்போது வரை அனலைதீவு பிரதேசம் முடக்கப்படவில்லை என ஊர்காவற்றுறை பிரதேச செயலக உத்தியோக பூர்வமாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இதனிடையே தலைமறைவாகியிருந்த நபர். காரைநகரில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவர் யாழ்ப்பாணம், காரைநகர் பகுதிகளில் நடமாடியு்ளளார். அதிகமாகக் காரைநகர் பகுதியில் நடமாடியுள்ளதாகவும் சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். அதையடுத்து காரைநகரின் ஒருபகுதியும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts:

முழுமையாக மக்கள் மயப்படுத்தப்பட்ட கட்சியாக கட்டமைக்கப்பட்டுள்ளது ஈ.பி.டி.பி - ஈ.பி.டி.பியின் யாழ்.மா...
முகக்கவசம் ஒன்றின் ஆகக் கூடிய பாதுகாப்புக்காலம் 4 மணிநேரம் மட்டுமே - சமூக சுகாதார பிரிவு அறிவிப்பு...
நிவாரணம் கிடைக்க வேண்டிய அனைவருக்கும் துரிதமாக நிவாரணம் வழங்கப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க த...