இந்திய கடன் திட்டத்தின் கீழ் 370 வகையான மருந்துகள் – இலங்கைக்கு வழங்க இந்திய அரசு இணக்கம் என துறைசார் அமைச்சர் தெரிவிப்பு!
Tuesday, December 20th, 2022இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் 370 வகையான மருந்துகளை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ள மேற்படி 370 வகை மருந்துப் பொருட்களும் அடுத்த மாதம் நாட்டை வந்தடையுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நாட்டுக்கு மிக அத்தியாவசியமான 14 வகை மருந்துகளில் ஏழு வகை மருந்துகளை ஒரு வருட தேவைக்காக இலங்கைக்கு வழங்குவதற்கு சீன அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்ெவல்ல சீனாவிலிருந்து கிடைக்கப்பெறும் மேற்படி மருந்துப்பொருட்கள் விரைவில் நாட்டுக்கு கிடைக்குமென்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மருந்துகள் தொடர்பில் சிலசில அசௌகரியங்கள் நிலவுவதை தாம் ஏற்றுக்ெகாள்வதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் எவ்வாறாயினும் மருந்துப்பொருள் இறக்குமதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த முடியுமானளவு அதனை முறையாக முன்னெடுத்துச் செல்ல முடிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மருந்துப் பொருட்கள் தொடர்பில் எத்தகைய தகவல்களையும் மறைப்பதில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் அனைத்து தகவல்களையும் பாராளுமன்றத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இலங்கைக்கு தேவையான அனைத்து மருந்துகள் தொடர்பான பட்டியலொன்றை இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|