இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 50,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்!
Friday, June 17th, 2022இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 50,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்குத் தேவையான நிதியை இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்திற்கு ஒதுக்குவது என பிரதமர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரிசி தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், அரிசி விலையில் அசாதாரணமான உயர்வைக் கட்டுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இந்திய கடன் தொடர்பான கலந்துரையாடலில் வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ, நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் அரச மற்றும் தனியார் துறை அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|