இந்திய கடன்திட்டத்தின் கீழ் கிடைக்கும் யூரியாவை பயன்படுத்தும் விதம் குறித்து கலந்துரையாடல் – விவசாய பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ள 65, 000 மெற்றிக் தொன் யூரியாவை பயிர்களுக்கு பயன்படுத்தும் முறைமை தொடர்பில் விவசாய அமைச்சுடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த வாரம் குறித்த சந்திப்பை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்த சூழ்நிலையில் நாட்டின் உரத்தின் தரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தாம் இடமளிக்க போவதில்லை எனவும் விவசாய பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் இந்திய உரத்தின் தரம் தொடர்பில் பிரச்சினை உள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தர நிறுவகத்தினால் உரத்திற்காக வழங்கப்பட்டுள்ள தரத்திற்கு அமைய யூரியா உரத்தில் பய்யுரேட் அளவு நூற்றுக்கு ஒன்றாக காணப்பட வேண்டும்.
எனினும் இந்தியாவின் தரக்கட்டுப்பாடு நூற்றுக்கு 1.5 என்ற அளவில் உள்ளமையினால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உரத்தின் தரம் தொடர்பில் பிரச்சினை காணப்படுவதாக ஜே.வி.பியின் தலைவர் குறிப்பிட்டார். குறித்த உரம் கொமர்ஷர் உர நிறுவனத்தின் ஊடாக இலங்கைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்தநிலையில் உர ஆலோசனைக் குழு, விவசாய பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டோர் தரம் தொடர்பில் வழங்கும் அறிவுறுத்தல்களுக்கு அமையவே அவற்றை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக அந்த நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|