இந்திய உளவுத்துறையின் எச்சரிக்கை – பேருந்துகளில் பயணப்பொதிகளை எடுத்துச் செல்வது தடை !

Tuesday, May 17th, 2022

இலங்கையில் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக ‘இந்து’ பத்திரிகை வெளியிட்ட தகவலை அடுத்து இலங்கையில் பயணிகள் சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பயணப்பொதிகளை எடுத்துச் செல்வது தடைசெய்யப்படவுள்ளது.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

பயணிகள் தமது பைகளை பொதிகள் வைக்கும் இடங்களில் வைக்காமல், அவற்றை தம் வசம் வைத்திருக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த எச்சரிக்கை தொடர்பில் மீண்டும் எங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பேருந்து ஊழியர்களுக்கு சங்கம் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சந்தேகத்திற்கிடமான பொதிகள் மற்றும் பேருந்துகளில் செல்பவர்கள் தொடர்பில் காவல்துறைக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும், பயணிகள் தங்களுடைய பாதுகாப்பையும் ஏனையவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு மீண்டும் அறிவுறுத்தப்படுவதாக அவர் ,மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: