இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்திப்பு – உறவுகளை பல்வேறு துறைகளிலும் மேலும் விருத்தி செய்வது தொடர்பில் ஆராய்வு!

Tuesday, November 2nd, 2021

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.  குறித்த சந்திப்பின் போது நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது கொவிட் நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தமை தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் அரசாங்கத்துக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புக்கள் தொடர்பில் சபாநாயகர் தனது நன்றியை தெரிவித்ததுடன், இருதரப்பு உறவுகளை பல்வேறு துறைகளிலும் மேலும் விருத்தி செய்வது தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: