இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே – வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை சந்திப்பு – இரு தரப்பு ஒப்பந்தங்களின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரான கோபால் பாக்லே வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை வெளிவிவகார அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள இரு தரப்பு ஒப்பந்தங்களின் முன்னேற்றம் தொடர்பில் இரு தரப்பினரும் இதன் போது கலந்துரையாடியுள்ளனர்.
மேலும் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயம் தொடர்பான பல விடயங்களை இருவரும் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒழுக்கத்தை மீறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை!
பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் மீள்குடியேற 233 குடும்பங்கள் பதிவு!
சீரற்ற காலநிலை - நாடளாவிய ரீதியில் மின்சார செயலிழப்பால் 475,000 பேர் பாதிப்பு!
|
|