இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே யாழ்ப்பாணத்திற்கு வருகை!

Friday, March 12th, 2021

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு இன்றையதினம் வருகைதந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை காலை வருகைதந்த அவர்,  வரலாற்றுப் பிரசித்திபெற்ற நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்குச் சென்று விசேட பூசை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் நல்லை ஆதீனத்திற்குச் சென்று ஆதீன குருமுதல்வரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்பின்னர், இந்திய உதவியில் அமைக்கப்படும் யாழ்ப்பாணக் கலாசார மத்திய நிலையத்திற்குச் சென்று கட்டுமாணப் பணிகளைப் பார்வையிட்ட அவர் பின்னர், யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்குச் சென்று நூலகத்தைப் பார்வையிட்டுள்ளார்.

இதன்போது, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகத் தூதுவர் பாலச்சந்திரன், மாநகரசபை உறுப்பினர்கள், அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: