இந்திய இராணுவ தளபதி – இராணுவ தளபதி சந்திப்பு!

இந்திய இராணுவ தெற்கு தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.எம் ஹரிஸ் பிவிஎஸ்எம் ஏவிஎஸ்எம் எஸ்எம் விஎஸ்எம் ஏடீசி நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வருகைதந்துள்ளார்.
இராணுவ தலைமையகத்தில் நேற்று காலை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயசுந்தர இந்திய தளபதியை வரவேற்றார்.பின்னர் இந்திய தளபதி மற்றும் இராணுவ தளபதிக்கு இடையில் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்திய இராணுவ தெற்கு தளபதி தெரிவிக்கையில், இந்திய இராணுவத்தினர் இலங்கை இராணுவ கொமாண்டோ, விஷேட படையணி , பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரி, காலாட்படை பயிற்சி முகாம்களில் பயிற்சிகளை பெறுவதற்கும் கடந்த காலங்களில் பெற்ற யுத்த ரீதியான அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இராணுவ தளபதி , கடந்த காலங்களில் இலங்கை இராணுவத்தின் பொறிமுறை காலாட்படைக்கு இந்திய இராணுவத்தினால் வழங்கப்பட்ட பயிற்சி ஒத்துழைப்புக்கும் இந்திய இராணுவத்தினால் இலங்கை இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினருக்கும் வழங்கும் பயிற்சிகள் தொடர்பாக தனது நன்றியை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்தார்.இந்த இலங்கைக்கான விஜயத்தின் போது இராணுவ தளபதியை சந்திப்பதற்காக இந்திய இராணுவ தெற்கு தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.எம். ஹரிஸ், மேஜர் ஜெனரல் வி.கே சிங் விஎஸ்எம் எம்ஜிஜிஎஸ் (நடவடிக்கை), இந்திய தெற்கு கட்டளை அதிகாரி கேர்ணல் எஸ் ஹவூஷல், இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்தனர்.
இந்திய இராணுவ தெற்கு தளபதி இந்த விஜயத்தின் போது இராணுவ தலைமையகத்தில் பிரமுகர்கள் கையொப்பமிடும் புத்தகத்தில் தனது வருகையையிட்டு கையொப்பமிட்டார். அதன் பின்பு இந்திய தளபதி பத்தரமுல்லையில் அமைந்துள்ள இந்திய அமைதி காக்கும் படையினர்களின் நினைவு தூபிக்கு சென்று அஞ்சலியை செலுத்தினார். இங்கு வருகை தந்த இந்திய இராணுவ மூத்த அதிகாரிகளுடன் அவர்களது பாரியார்களும் வருகைதந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|