இந்திய ஆசிரியர்கள் தொடர்பில் கல்வியமைச்சரின் தெளிவுபடுத்தல்!

Thursday, May 25th, 2017

பெருந்தோட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை தருவிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் இன்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் கேள்வி எழுப்பினார்

இதற்கு பதில் வழங்கிய கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், பெருந்தோட்டப்புற பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நிரப்பும் பணி தொடர்வதாக குறிப்பிட்டார் எனினும் இன்னும் அந்த பணி நிறைவடையவில்லை என தெரிவித்தார்.

பெருந்தோட்டப்புற பாடசாலைகளுக்கு பணிகளுக்காக செல்லும் பெரும்பாலான ஆசிரியர்கள் அங்கு பணியாற்றாது தமது பணிகளை விட்டு விலகி செல்கின்றனர் இது தொடர்ந்தும் இடம்பெற்று கொண்டிருக்கின்றது. இதன்காரணமாகவே இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை தருவிப்பது தொடர்பான ஆலோசனை கல்வி இராஜாங்க அமைச்சருக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்

அத்துடன் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள குறைந்த தரப்பேறு பேறு கொண்டவர்களை அனுமதித்து அவர்களுக்கு சிறந்த பயிற்சிகளை வழங்குவதன் மூலம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியும் என அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார்

இதேவேளை, வெளிநாட்டு ஆசிரியர்களை தருவிக்கும் போது இலங்கையிலிருந்து பணத்தை செலவழித்து அவர்களை வரவழைக்காமல் உதவி என்ற அடிப்படையில் நாடுகளிலிருந்து ஆசிரியர்களை பெற்று காலவரையறையின் கீழ் அவர்களிடமிருந்து சேவைகளை பெற்று கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்

Related posts: