இந்திய ஆசிரியர்களை மலையகத்தில் அனுமதியளித்தால் நாடு தழுவிய ரீதியில் போராட்டம்!

Thursday, May 18th, 2017

இந்திய ஆசிரியர்களை மலையகத்தில் கற்பிக்க அனுமதியளித்தால் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் மலையக மாணவர்களின் கல்வி தொடர்பில் இதுவரையில் எவ்வி வித கரிசனையும் காட்டவில்லை இந்நிலையில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றும் செயற்பாட்டை ஆசிரியர் நியமனத்திலும் மேற்கொள்ள வேண்டாம் என அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

மருதானை சன சமூக நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts: