இந்திய அரசின் நிதியுதவியில் வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு மனிதாபிமான உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு!

“இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்” எனும் தொனிப்பொருளில் இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களுக்கு இன்றையதினம் மனிதாபிமான உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு, இவ் உதவிப் பொருட்களை இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கடற்றொழிலாளர்களிடம் நேரடியாக கையளித்தார்.
600 கடற்றொழிலாளர்களுக்கு இந்த உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்படஅடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்படவுள்ள நிலையில் ஆரம்பகட்ட நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
எதிர்காலத்தில் நீர்க்கட்டணமும் அதிகரிக்கும் – நகர திட்டமிடல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர்!
எகிப்து தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம்!
எக்ஸ் - பிரஸ் பேர்ல் கப்பலை அகற்றும் பணிகள் நவம்பரில் முன்னெடுப்பு - நீதி அமைச்சர் அலி சப்ரி தகவல்!
|
|