இந்தியா வழங்கும் யூரியா பசளை ஜூலை 6 நாட்டை வந்தடையும் – நாட்டில் ஒருபோதும் பஞ்சநிலை ஏற்படாது – அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதி!

Saturday, June 18th, 2022

இந்தியாவினால் வழங்கப்படும் யூரியா பசளை அடுத்த மாதம் 06 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பான ஒப்பந்தம் இந்தியாவுடன் கைச்சாத்தாகியுள்ளது. நாட்டை வந்தடையவுள்ள யூரியா பசளையை கிரமமான முறையில் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

இதேவேளை நாட்டில் தற்போது பரந்தளவிலான விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் பஞ்சம் ஏற்படாது என கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஒரு மாதத்திற்கு 500 தொடக்கம் 1000 மெட்ரிக் தொன் அரிசியே விநியோகிக்கப்படுகிறது.

எனினும், அதனை 10 ஆயிரம் மெட்ரிக் தொன்னாக அதிகரிக்க நாம் ஆலோசனை வழங்கியுள்ளோம்.தேவைக்கு ஏற்ப சதோச மற்றும் ஏனைய பல்பொருள் அங்காடிகளில் அரிசியை பெற்றுக்கொள்ள முடியும்.

நான் அமைச்சுப் பதவியை ஏற்பதற்கு முன் 248,000 ஹெக்டேயர் நிலப்பரப்பே விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது 470,000 ஹெக்டேயராக அதிகரித்துள்ளது. எனவே நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது. மக்கள் வீணாக அச்சப்படத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: