இந்தியா நிதி உதவி – புனரமைப்பு பணிக்காக அனுராதபுரம் – வவுனியா புகையிரத சேவை 5 மாதங்களுக்கு இடைநிறுத்தம்!

Wednesday, February 16th, 2022

புனரமைப்புப் பணிகளுக்காக அனுராதபுரம்முதல் வவுனியா வரையான புகையிரத பாதை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், எதிர்வரும் 5 ஆம் திகதியிலிருந்து 05 மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறு புகையிரத பாதை மூடப்பட்டதன் பின்னர், யாழ்தேவி மற்றும் இலக்கம் 17 புகையிரத பயணிகளுக்காக வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கான புகையிரத ஏற்பாடு செய்யப்படுவுள்ளதாகவும் ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பயணிகளின் போக்குவரத்திற்காக அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரை பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய கடனுதவியின் கீழ் குறித்த புகையிரத பாதை புனரமைக்கப்படவுள்ள நிலையில், இரண்டாம் கட்டத்தின் கீழ் அனுராதபுரம் தொடக்கம் மஹவ வரையான பகுதி 6 மாதங்களுக்கு நிறுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: