இந்தியா நிதியுதவி – நவம்பர்முதல் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை – அமைச்சரவையின் ஒப்புதலுக்காக இன்று சமர்ப்பிக்கபு என தொழில்நுட்ப அமைச்சு தெரிவிப்பு!

இந்தியாவின் நிதியுதவியுடன் நாட்டில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என அமைச்சின் செயலாளரான ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக இலங்கைக்கு 8 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்தி டுவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் அண்மையில் வழங்கப்பட்டது.
பயோமெட்ரிக் தகவல் மூலம் குடிமக்களை அடையாளம் காண்பதை எளிதாக்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த வருடம் நவம்பர் மாதம் முதல், பிரஜை களுக்கான டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ள தாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|