இந்தியா செல்ல தயாராகும் அமைச்சர் நாமல் ராஜபக்ச – 100 இற்கும் மேற்பட்ட பௌத்த மதகுருமாரும் விஜயம் என தெரிவிழப்பு!

Tuesday, October 12th, 2021

இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ச எதிர்வரும் 20 ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளார்.

அத்துடன் அமைச்சருடன் 100 க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகளும் இந்த பயணத்தில் இணைந்துக்கொள்ள உள்ளனர்.

அமைச்சர் நாமல் ராஜபக்சவுடன் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் புத்தசாசனம், சமய விவகார அமைச்சின் அதிகாரிகள் பலரும் இந்தியாவுக்கு செல்ல உள்ளனர்.

கௌதம புத்த பகவான் பரிநிர்வாணம் அடைந்த இடமாக நம்பப்படும் குஷிநகர் பௌத்த யாத்திரீகர்கள் செல்லும் முக்கியமான பிரதேசமாகும்.

கடந்த வருடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும்இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், இந்த பயணத்திற்கான அழைப்பு இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: