இந்தியா எப்போதும் இலங்கையுடன் இருக்கும் – இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவிப்பு!

Friday, December 31st, 2021

நெருங்கிய நண்பராகவும் அயலவராகவும் இந்தியா எப்போதும் இலங்கையுடன் இருக்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த மாத முற்பகுதியில் புது டெல்லியில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலுக்கு அமைய, இலங்கைக்கு நீண்டகால மற்றும் மத்திய கால ஒத்துழைப்புகள் கிடைக்கவுள்ளதாக வருட இறுதி விருந்துபசாரத்தில் கலந்துகொண்டு இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தின் போது உணவு, சுகாதார பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் செலாவணி ஸ்திரத்தன்மை ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: