இந்தியாவுடன் இணைந்து செயற்படுவோம் – இராணுவத் தளபதி!

Sunday, June 23rd, 2019

புலனாய்வு தகவல்களை பெற்று கொள்வதற்காக இந்தியாவுடன் இணைந்து செயற்பட உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாதுருஒயா இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு நாட்டிலும் ஏதேனும் காலப்பகுதியில் ஏதாவதொரு சம்பவம் இடம்பெறக் கூடும்.

எந்தவொரு நாட்டிலும் எந்தவித சம்பவமும் இடம்பெறாது என உறுதிப்படுத்தவோ உத்தரவாதமளிக்கவோ முடியாது.

இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய வலையமைப்பை இனங்கண்டுள்ளோம். விஷேடமாக இந்தியாவுடன், புலனாய்வு நடவடிக்கைகள் குறித்து இணைந்து செயற்படுகின்றோம்.

தற்போது சர்வதேச பயங்கரவாதத்திற்கு முகங்கொடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாடுகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கிடையே உறவுகள் பேணப்பட வேண்டும் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்

Related posts: