இந்தியாவுக்கு செல்கிறார் ஜனாதிபதி!

Saturday, March 10th, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் இந்தியா மற்றும் ஜப்பானுக்கான பயணத்தை ஆரம்பிக்கிறார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஃப்ரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் ஆகியோரின் கூட்டு அழைப்பின் பேரில், ஜனாதிபதியின் இன்றைய இந்திய பயணம் அமைகிறது.

நாளை புதுல்லியில் நடைபெறவுள்ள முதலாவது சர்வதேச சூரியசக்தி கூட்டணி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி இந்தியா செல்கிறார்.இதேநேரம் எதிர்வரும் 13ம் திகதி ஜப்பானுக்கான பயணத்தை ஜனாதிபதி மேற்கொள்கிறார்.

ஜப்பானிய பிரதமர் சின்சோ அபேயின் அழைப்பின் பேரில் அங்கு செல்லும் ஜனாதிபதி, எதிர்வரும் 17ம் திகதி வரையில் அங்கு தங்கி இருப்பார்.

அங்கு அவர் ஜப்பானிய பேரரசர் உள்ளிட்ட பலரையும் சந்திக்கவுள்ளதுடன், பல்வேறு உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: