இந்தியாவுக்கான புதிய இலங்கை தூதராக ஆஸ்டின் பெர்னாண்டோ?

Saturday, July 21st, 2018

இந்தியாவுக்கான இலங்கையின் புதிய தூதராக ஆஸ்டின் பெர்னாண்டோவை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா நியமித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே இந்தியாவுக்கான இலங்கையின் தூதராக சித்ராங்கனே வாகிஸ்வரா உள்ள நிலையில் அவருக்குப் பதிலாக இவர் புதிய தூதராக நியமிக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
உயர் பதவி நியமனங்களுக்கான நாடாளுமன்ற குழு ஒப்புதலுக்கு பின்னர் அவர் பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளராக பணியாற்றிய ஆஸ்டின் பெர்னாண்டோ அண்மையில் ராஜினாமா செய்திருந்தார். அத்துடன் ஜனாதிபதி ஆலோசகராகவும், கிழக்கு மாகாண கவர்னராகவும் ஏற்கனவே இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: