இந்தியாவில் பரவும் திரிபடைந்த கொரோனா இலங்கையிலும் கண்டறிவு!

இந்தியாவில் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரசின் திரிபடைந்த வைரஸ் தொற்றுடன் இலங்கையில் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார்.
திரிபடைந்த B1.617 என்ற கொரோனா வைரசே இவ்வாறு ஒருவரக்குக் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர், கொழும்பு தனிமைப்படுத்தல் மையமொன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் இந்தத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சிறுவனை மீட்டு பொலிஸில் ஒப்படைத்த முல்லைத்தீவு இளைஞர்கள்!
விரைவில் 25 ஆயிரம் பெண் தொழில் முனைவோர்களை கொண்ட கிராமப்புற வர்த்தக வலையமைப்பு உருவாக்க நடவடிக்கை - ...
மின்சார நெருக்கடி எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்டது - துவிச்சக்கர வண்டியை பயன்படுத்துவதும் சிறந்த...
|
|