இந்தியாவில் இருந்து மேலும் 21,000 மெட்ரிக் தொன் உரம் – விவசாயத்துறை அமைச்சு அறிவிப்பு!
Monday, July 18th, 2022அடுத்த இரண்டு வாரங்களில் இந்தியாவில் இருந்து மேலும் 21,000 மெட்ரிக் தொன் உரம் நாட்டிற்கு வரும் என விவசாயத்துறை அமைச்சு கூறியுள்ளது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த இருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய கடனின் கீழ் கொள்முதல் செய்யப்பட்ட 65,000 மெட்ரிக் தொன் உரத்தில் இருந்து மொத்தம் 44,000 மெட்ரிக் தொன் உரம் கடந்த வாரம் நாட்டிற்கு வந்துள்ளது.
உரங்களை விநியோகிப்பதற்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு நிதி வழங்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் உர விநியோகம் மேற்கொள்ளப்படுவதாக விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு இராணுவ சிப்பாய்க்கு உத்தரவு!
'சிறுவர்களைப் பாதுகாப்போம்' தேசிய செயற்திட்டம் ஆரம்பம்!
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை!
|
|