இந்தியாவில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை!

Wednesday, November 9th, 2016

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுப்பதற்கான விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக விசேட படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன கூறியுள்ளார். மன்னார் மற்றும் வட பகுதிகளில் இந்த விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படைத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக இந்தியாவில் இருந்து நாட்டிற்குள் கேரள கஞ்சா கடத்தப்படுவதை தடுப்பதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

NAVY-e1418338098668

Related posts: