இந்தியாவிலும் கொரோனா நோய் தொற்றாளர்…!

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் முதலாவது கொரோனா நோய்த் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தியாவின் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது,
சீனாவின் வுஹான் பகுதியிலுள்ள பல்கலைகழகமொன்றில் கல்வி பயின்ற மாணவர் ஒருவரே இவ்வாறு நோய் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த மாணவர்சில நாட்களுக்கு முன்னதாகவே சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வருகை தந்துள்ளதாக இந்திய ஊடகத்தகவலகள் குறிப்பிடுகின்றன.
அவர் தற்போது தனிமைபடுத்தப்பட்டுள்ள சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கேரளா மாநிலத்தில் காய்ச்சல் காரணமாக சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதுவரையில் கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 170 பேர் பலியாகியுள்ளதோடு அவர்களில் 38 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் பலியாகியுள்ளனர்.
அத்துடன் சீனா உட்பட 20 நாடுகளுக்கும்அதிகளவான நாடுகளில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் சீனாவில் 7ஆயிரத்து 711 பேர் குறித்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
மேலும் தாய்லாந்தில் 14 கொரோனா நோய் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|