இந்தியாவிலிருந்து 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் – அடுத்த மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் கிடைக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரம், அடுத்த மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் கிடைக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இவை இந்தியாவின் தேவைக்காக ஓமானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்றும் தெரிவித்த அமைச்சர் எனினும், இலங்கை விவசாயிகள் எதிர்நோக்கும் உரத் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு யூரியா உரத்தை இலங்கைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த உரத் தொகை கிடைத்ததும் அவற்றை உடனடியாக 2, அல்லது 3 நாட்களுக்குள் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், சிறுபோகத்தில் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஒரு பொதி யூரியா உரத்தை 10,000 ரூபாவிற்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அன்னாசி செய்கை விஸ்தரிப்பு!
இன்று கூடுகிறது நாடாளுமன்றம்!
வடக்கு மாகாணத்திற்கு அண்டிஜன் பரிசோதனை தேவையற்ற ஒன்று என்கிறார் மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வர...
|
|
இன்று நாடாளுமன்றம் கலைக்கப்படக்கூடும்? : ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடத்தமுடியும் - மஹிந்த தேசப்பிரிய!
அரசியல் சித்தாந்தம் எதுவாக இருப்பினும் சுனில் பெரேரா ஒரு சிரேஷ்ட கலைஞராக இலங்கை மக்களின் இதயங்களில் ...
கருத்து வேறுபாடுகளை சகித்துக்கொள்வதில் பல வருடம் எனக்கு உள்ளது அனுபவமுண்டு - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ...