இந்தியாவிலிருந்து ரயில் தொகுதி  இறக்குமதி!

Thursday, November 22nd, 2018

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ரயில் தொகுதியின் முதலாவது தொகுதி அடுத்தவாரம் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதில் இரண்டு ரயில் எஞ்சின்களும், ரயில்பெட்டிகளும் உள்ளடங்குகின்றன. இவ்வாறு கொண்டுவரப்படும் ரயில் தொகுதியின் முதலாவது பரீட்சார்த்த பயணம் கொழும்புக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையில்  ஈடுபடுத்தப்படவுள்ளது. அதன் தரத்தின் அடிப்படையில் எஞ்சிய ரயில் தொகுதிகளும் கொண்டுவரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ரயில்கட்டணங்கள் அதிகரித்த நிலையில், ரயில்வே திணைக்களத்தின் வருமானமும் அதிகரித்திருப்பதாக ரயில்வே பொதுமுகாமையாளர் குறிப்பிட்டார். ரயில் கட்டணங்களுக்கு அமைய புதிய பயணச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டுவருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts:

யாழ்.மாவட்ட இளையயோருக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு - யாழ்.மாவட்டச் செயலர் அறிவிப்பு!
அதிகாரங்களை சரியாக பயன்படுத்துவதனூடாகவே மக்கள் நலன் சார் திட்டங்களை சிறந்த முறையில் முன்னெடுத்துச் ச...
இணையவழி பாதுகாப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட விவகாரம் – ஐ.நா கூட்டத்தொடரில் கலந்து...