இந்தியாவிலிருந்து திருகோணமலைக்கு எண்ணெய் விநியோக குழாய் மார்க்கத்தை அமைக்க நடவடிக்கை!
Saturday, July 15th, 2023இந்தியாவின் – நாகப்பட்டிணத்திலிருந்து திருகோணமலை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு எண்ணெய் விநியோக குழாய் மார்க்கத்தை அமைப்பதற்கான யோசனையை இந்திய ஒயில் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில், பல தரப்பினருடன், கலந்துரையாடியுள்ளதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்போது, அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை கருத்திற்கொண்டு இருவழி எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய் அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அமைச்சர் இந்தியன் ஒயில் நிறுவன அதிகாரிகளிடம் யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.
குறித்த யோசனையின் சாத்தியகூறுகள் மற்றும் தொழிநுட்ப தேவைகள் குறித்து மதிப்பாய்வு செய்யவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மருத்துவ பீட அனுமதிக்கு உயர்தரப் பரீட்சையில் 2 A, 1B பெறுபேறு கட்டாயம் – இலங்கை மருத்துவ சபை!
எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையும் - போதுமானளவு எரிவாயு உள்ளதாக தொழில்ந...
மாலைதீவு – இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து - அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
|
|