இந்தியாவிற்குள்ளும் நுழைந்தது ஒமிக்ரோன் தொற்று!

Tuesday, November 30th, 2021

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திற்கு வருகை தந்த 4 வெளிநாட்டவர்களுக்கு ஒமிக்ரோன் தொற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் கண்டறியப்பட்ட மிகவும் பரவக்கூடிய மாறுபட்ட கொரோனாவான ஒமிக்ரோன் குறித்த கவலைகளுக்கு மத்தியில் மதுராவிற்கு வந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 வெளிநாட்டுப் பயணிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுக்கு ஒமிக்ரோன் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த நான்கு பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த நால்வரும் சுற்றி வந்த பகுதிகளிலுள்ள மக்களுக்கு சோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

000

Related posts:

யாழ்.நீதிமன்றத்தை மக்கள் தாக்கியமைக்கு ஊர்காவற்றுறை பொலிஸ் அதிகாரியே காரணம் -  ட்ரயல் அட்பார் தீர்ப்...
தொற்றா நோய்த் தாக்கத்துக்கு சிறார்கள் உள்ளாகும் ஆபத்து - தொற்றா நோய்த் தடுப்புப் பிரிவு எச்சரிக்கை!
பிசிஆர் பரிசோதனைக்கு 6 ஆயிரத்து 500 : அன்டிஜனுக்கு 2 ஆயிரம் - தனியார் மருத்துவமனைகளுக்கு நிர்ணய வில...