இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் சந்திப்பு!

Wednesday, February 1st, 2023

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை நேற்று (31) புதுடில்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சில் சந்தித்துள்ளார்.

இதன்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலை தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் ஆகியோர், ஜெய்சங்கரின் அண்மைய இலங்கை பயணத்தின் பின்தொடர்தல் நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: