இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று – உற்பத்தித் துறையில் இந்தியா வரலாறு படைத்து வருகிறது – சுதந்திரதின உரையில் பிரதமர் மோடி தெரிவிப்பு!
Monday, August 15th, 2022இந்தியா தேசம் தனது 75 ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. தலைநகர் புது டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது.
இதன்போது, முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டதுடன் 21 வேட்டுகள் முழங்க தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தவுத்தப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டுமுதல் தொடர்ந்து 9 ஆவது முறையாக இன்று சுதந்திர தின விழாவில் தேசியக்கொடி ஏற்றியிருந்ததுடன் புது டில்லியில் அமைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்காத மேடையில் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு சுதந்திரதின உரையையும் ஆற்றியிரந்தார்.
சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், வெளிநாட்டு தூதர்கள், மேன்முறையீட்டு நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், மற்றும் உயர் அதிகாரிகள் என 7 ஆயிரம் பேர் கலந்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடர்ந்து 9 ஆவது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
அவர் 2014 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான தலைப்பாகை அணிந்து தேசியக் கொடி ஏற்றியிருந்தார். இதே போல இன்றும் மோடியின் தலைப்பாகை வித்தியாசமாக இருந்தது. மூவர்ணக் கோடுகளுடன் கூடிய வெள்ளை நிற தலைப்பாகை அணிந்து தேசியக் கொடியை ஏற்றினார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் விடுதலைப் போராட்டத்தை நினைவுகூர்ந்து பேசுகையில் கூறியதாவது:-
இந்த சுதந்திர தினத்தில் அனைத்து இந்தியர்களுக்கும் மற்றும் இந்தியா மீது அன்பு கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு புதிய திசையில், ஒரு புதிய தீர்மானத்துடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தினம் இன்று. இந்தத் தினத்தில், கடமையைச் செய்யும் பணியில் தங்களது உயிரை ஈந்த மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பாபாசாகேப் அம்பேத்கார், வீர சாவர்க்கர் உள்ளிட்டவர்களுக்கு நாட்டின் குடிமக்கள் நன்றியுடையவர்களாக உள்ளனர்.
ராணி லட்சுமிபாய் ஆகட்டும், ஜல்காரி பாய், சென்னம்மா, பேகன் ஹஜ்ரத் மகால் போன்ற இந்தியப் பெண்களின் வலிமையை நினைவுகூரும்போது, இந்தியா பெருமையால் நிரம்பி வழிகிறது.
பிரிட்டிஷ் அரசாட்சியின் அடித்தளத்தை அசைத்த மங்கள் பாண்டே, தத்யா தோப், பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு, சந்திரசேகர் ஆசாத், அஸ்வாகுல்லா கான், ராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் நம்முடைய எண்ணற்ற புரட்சியாளர்களுக்கு நாடு நன்றி செலுத்துகிறது.
முன்னேறிய எந்த நாடாக இருந்தாலும் சரி, அந்த நாட்டின் குடிமக்களிடம் ஒழுக்கம் ஆழமாகப் பதிந்துள்ளது. அதேபோன்று மக்கள் அனைவரும் தங்கள் பொறுப்புகளை பின்பற்றினால் இந்தியா வேகமாக வளரும்.
குறிப்பாக இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்களுக்கான மரியாதை என்பது முக்கிய தூண் ஆகும். ஆகவே நமது பெண்களின் சக்திக்கு ஆதரவளிக்க வேண்டும். உற்பத்தித் துறையில் இந்தியா வரலாறு படைத்து வருகிறது. கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் டிஜிட்டல் மூலம் புரட்சி ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|