இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம் இன்று – செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார்!

Sunday, August 15th, 2021

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடம் இருந்து பாரத தேசம் விடுதலை அடைந்து 75 வருடங்கள் இன்றுடன் நிறைவடைந்துவிட்டன

அந்தவகையில் பாரததேசம் தனது 75-வது சுதந்திர தினத்தை இன்றையதினம் கொண்டாடுகின்றது.

கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில், கட்டுபாடுகளுடனும், அதே நேரத்தில் வழக்கமான உற்சாகத்தோடும் நாடு முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுட்டது.

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலை மூவர்ணக்கொடியேற்றி வைத்து, வீர வணக்கம் செலுத்தினார்.

தொடர்ந்து நாட்டு மக்களுக்கு அவர் சுதந்திர தின உரையை ஆற்றி வருகிறார். இந்த விழாவில் மூத்த மத்திய மந்திரிகள், அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு தூதர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பதக்கங்களைப் பெற்ற வீரர்கள், வீராங்கனைகள் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது..

Related posts: